அடேங்கப்பா.. நான்கே மாதத்தில் இவ்வளவு கோடி சம்பளமா?.. வாயை பிளக்க வைக்கும் ஸ்டார்பக் அதிகாரி ஊதியம்!

பிரபல அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் நிக்கோல், கடந்த ஆண்டு வெறும் 4 மாதங்களில் 827 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். கடந்த செப்டம்பரில் நிறுவனத்தில் சேர்ந்த நான்கு மாதங்களில் ஸ்டார்பக்ஸ் அவருக்கு இந்த சம்பளத்தை வழங்கியுள்ளது. இது கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆகியோரின் சம்பளத்தை விட அதிகம்.
கலிபோர்னியாவிலிருந்து ஸ்டார்பக்ஸ் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டிலுக்கு பிரையன் நிக்கோலின் தனியார் ஜெட் விமானத்திற்கு அந்த நிறுவனமே பணம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களது கிளைகளை அதிகமாக திறந்து வருகிறது. இந்த நிலையில், தலைமை நிர்வாக அதிகாரிக்கு சம்பளத்தை அந்நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. இது பிரபல நிறுவனங்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!