இன்று நள்ளிரவு முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் ஓடாது!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதன்படி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூ.18 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டுபவர்கள், இன்று நள்ளிரவு முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஓலா, ஊபர் நிறுவனங்கள் 25% கமிஷன் தொகையாக கேட்கின்றனர் என்றும் இதனை கண்டித்து இரு நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தப் போகிறோம் என்றும் வரும் பிப்ரவரி 1 ம் தேதி முதல் இந்த இரு நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினரை அழைத்து ஓலா, ஊபர் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!