ஒலிம்பிக் சாம்பியன் சார்லஸ் கோஸ்ட் காலமானார்... ஒலிம்பிக் சாதனையாளர்களில் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர்!
ஒலிம்பிக் வரலாற்றில் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த சாம்பியன்களில் ஒருவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சார்லஸ் கோஸ்ட் காலமானார். அவர் வயது 101.

1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டிராக் சைக்கிளிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று பிரான்சுக்கு பெருமை சேர்த்தார். பின்னர் பல சர்வதேச போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது நாட்டின் விளையாட்டு வரலாற்றில் மறக்கமுடியாத வீரராக திகழ்ந்தார்.

கடந்த ஆண்டு நடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், ஒலிம்பிக் தீப ஜோதியை ஏந்திச் சென்று பெருமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்லஸ் கோஸ்டின் மறைவுச் செய்தி வெளியாகியதையடுத்து பிரான்ஸ் முழுவதும் துக்கநிலை நிலவுகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
