ஒரே நாடு ஒரே தேர்தல்... குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா? மத்திய அமைச்சர் பரபர தகவல்!
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் பாஜக அரசு பெரும்முயற்சி செய்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளின் படி மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். மாநில உள்ளாட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடந்தலாம் என ராம்நாத் கோவிந்த் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.இத்திட்டம் குறித்து இன்று கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றினார். அதில் “நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மீதம் உள்ள ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே திட்டத்தை விரைவில் செயல்படுத்தும்” எனக் கூறினார். மேலும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு திட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என நம்புகிறேன். ” எனவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!