இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்?! இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா!!

 
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்?! இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா!!


ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 11500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்?! இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா!!


அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 2 பதக்கங்களை பெற்றுள்ளது. பளு தூக்குதலில் மீரா பாய் சானு, பேட்மிண்டனில் பி.வி.சிந்து முறையே வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியுள்ளார்.


ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், இன்று காலை நடந்த தகுதி சுற்று போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியில், 86.65 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் ஆகஸ்ட்7ம் தேதி நடைபெறும் பைனலுக்கு அவர் முன்னேறி உள்ளார். ஜெர்மனியின் வெட்டர் (85.64 மீ) மற்றும் பின்லாந்தின் எடிலேடொலோ (84.50 மீ) அடுத்தடுத்த இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
குத்துச்சண்டையில் லவ்லினா இன்று அரையிறுதியில் துருக்கி வீராங்கனையை எதிர் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web