திடீரென எகிறிய சின்ன வெங்காயம் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் சின்ன வெங்காயம் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.150 வரையிலும் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக விளைச்சல் குறைவால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தைக் காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து உச்சத்திலிருந்து வரும் முருங்கைக்காய் விலை ரூ.200லிருந்து ஒரு கிலோ ரூ.150க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.200க்கும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், ஊட்டிக் கேரட் மற்றும் பீட்ரூட் கிலோ ரூ.70-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சின்ன வெங்காயம் திடீரென இரண்டு மடங்கு விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!