ஆன்லைனில் மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்கள் முன்பதிவு... கலெக்டர் அறிவிப்பு!
புது வருடம் துவங்க உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து அறிவிப்புகளும் களைக்கட்ட துவங்கியுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி, போட்டிகளில் பங்கேற்கும் முறைகள் என்று தினம் தினம் வெளியாகிற அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கின்றன.
இந்நிலையில் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் சுமார் 8 அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காளைகளுக்கு குடிநீர் மற்றும் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள், வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!