தக்காளி கிலோ ரூ 30 மட்டுமே?! கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்!!

தக்காளி கிலோ ரூ 30 மட்டுமே?! கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பெரு மழையின் காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை கிலோ ரூ160 முதல் 200க்கு சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் நகரும் பசுமைப் பண்ணை கடைகள் மூலம் ரூ 70க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி கிலோ ரூ 30 மட்டுமே?! கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்!!

அதே நேரத்தில் குறிப்பிட்ட ரேஷன் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடலூரில் தக்காளி விலை நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தக்காளி கிலோ ரூ 30 மட்டுமே?! கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்!!

இந்தக் கடையில் வெங்காயம் கிலோ 25 ரூபாய், தக்காளி 30 ரூபாய். இதனால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு தக்காளியும், வெங்காயமும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களுக்கும் தக்காளி விரைவில் இயல்பான நிலையை எட்டி விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

From around the web