அச்சச்சோ... விருதுநகரைத் தொடர்ந்து சிவகங்கையில் பட்டாசு ஆலை... சீல் வைத்த அதிகாரிகள்.. பட்டாசுகள் பறிமுதல்!

 
பட்டாசு ஆலை

எவ்வளவு உசுரு போனாலும், தீப்பெட்டிகள் உரசுவதைப் போல விபத்துக்கள் நேர்ந்தாலும் பணத்தாசை மனுஷனை திருந்தவே விடாது போல. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் சட்டவிரோதமாகவும் திடீர் திடீரென பட்டாசு ஆலைகள் முளைக்கின்றன. அப்படி சிவகங்கை  மாவட்டம் மானாமதுரை அருகே வாடிவில்லி புத்திரியேந்தல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இருந்து பல லட்சம் ரூபாயிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாடிவில்லிபுத்திரியேந்தல் பகுதியில் முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் கோழி பண்ணை இயங்கி வந்தது. அதில் கடந்த 10 தினங்களாக சட்ட விரோதமாக பட்டாசு ஆலை இயங்குவதாக செந்தட்டியேந்தல் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவுக்கு புகார் வந்தது.

பட்டாசு விபத்து

இது குறித்த தகவலின் பேரில் டிஎஸ்பி நிரேஷ், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பூ, சங்குசக்கரம், வாணவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

ஆனால் அதிகாரிகளை கண்டதும் பட்டாசுகளை தயாரித்தோர் தப்பியோடினர். இதையடுத்து பல லட்சம் ரூபாயிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர்.

பட்டாசு கடை

இது குறித்து வருவாய்த்துறையினர், போலீஸார் கூறியதாவது: மொத்தம் 1.10 ஏக்கரில் ஆலை இயங்கி வந்தது. அங்கிருந்த ரூ.7 லட்சம் மதிப்பாலான பட்டாசுகள், வெடி மருந்துகளை பறிமுதல் செய்தோம்.

விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு ஆலைகள் விபத்துக்குள்ளாவதால் அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்ட எல்லையான சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக ஆலையை ஏற்படுத்தி தயாரித்து வந்துள்ளனர். நில உரிமையாளர், பட்டாசு தயாரித்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகிறோம்” என்று கூறினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web