அட! கோவில்களிலும் வைரலாகும் டிஜிட்டல் இந்தியா !

 
அட! கோவில்களிலும் வைரலாகும் டிஜிட்டல் இந்தியா !

இந்தியாவை டிஜிட்டல் இந்தியா ஆக்குவது தான் பிரதமரின் கனவு திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் பெட்டிக்கடைகள் , தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிகவளாகங்கள் வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

அட! கோவில்களிலும் வைரலாகும் டிஜிட்டல் இந்தியா !

க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தும் வசதி . ஸ்மார்ட்போனில் இருந்து பணம் செலுத்தவேண்டியவர்களுக்கு வர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.தற்போது இந்த நவீன தொழில்நுப்டம் கடைகளிலிருந்து வழிபாட்டு தலங்கள் வரை முன்னேற்றம் அடைந்துள்ளது. கோவில்களிலும் உண்டியலுக்கு பதிலாக மின்னணு முறையில் பணம் செலுத்தலாம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

தற்போதைய வாழ்க்கை முறையில் வீட்டை விட்டு வெளியே வரும் போது பலரும் பணத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வது இல்லை.
அதேபோன்று கோவில்களிலும் காணிக்கை குறைந்து வருவதாக கருதப்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் விநாயகர் கோவில் நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளது.

அட! கோவில்களிலும் வைரலாகும் டிஜிட்டல் இந்தியா !


அதன்படி விநாயகர் கோவில் ஒன்றில் டிஜிட்டல் உண்டியல் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. வழக்கமாக கோவில்களில் வைக்கப்படும் உண்டியலுக்கு பதிலாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வகையில், க்யூ.ஆர் கோடுகள் வைக்கப்பட்டிருப்பது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அத்துடன் புதிய முறையில் பக்தர்கள் ஆர்வத்துடன் காணிக்கைப் பணம் செலுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

From around the web