ஆக.31ம் தேதி வரை ஊட்டி மலை ரயில் ரத்து... பயணிகள் ஏமாற்றம்!
வார விடுமுறை, கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாட்கள் வந்த நிலையில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இம்மாதம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் 26ம் தேதி சீர் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைரயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மலைரயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே ஆகஸ்ட் 31ம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தொடர் விடுமுறை தினங்களையொட்டி ஊட்டி மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா