இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

 
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

 தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை  பெய்து வருகிறது. இந்நிலையில்  இரவு குன்னூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த பெருமழை காரணமாக நகரின்  முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. கனமழையால் மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம், சேலாஸ் உட்பட 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் கடும்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மண், பாறைகளை அகற்றினர்.

ஊட்டி

கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.   அதே நேரத்தில் கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், உதகை - குன்னூர் இடையே இயங்கும் மலை ரயில் சேவை இன்று  நவம்பர் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டும்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web