ஆகஸ்ட் 31 வரை ஊட்டி மலை ரயில் ரத்து... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நேற்று வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைரயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மலைரயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆகஸ்ட் 31ம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!