முதலில் தொடக்கப் பள்ளிகளை திறங்க! ஐசிஎம்ஆர் அதிரடி தகவல்!

 
முதலில் தொடக்கப் பள்ளிகளை திறங்க! ஐசிஎம்ஆர் அதிரடி தகவல்!

இந்தியாவில், கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து சில மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றன. இதற்கிடையே கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அது, குழந்தைகளை தான் அதிக அளவில் தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் நிரூபிக்கப்படவில்லை என மருத்துவ வல்லுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக கொரோன பரவல் நீடித்து வரும் நிலையில் குழந்தைகளிடமும், பெரியவர்களைப் போல ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் தற்போது தொடக்கப் பள்ளிகளை திறக்கலாம் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

முதலில் தொடக்கப் பள்ளிகளை திறங்க! ஐசிஎம்ஆர் அதிரடி தகவல்!

இது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் விடுத்த செய்திக்குறிப்பில் “பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட கையாள முடியும் . இதற்கான 4வது தேசிய செரோ ஆய்வில், குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவை உருவாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், முதலில் தொடக்கப் பள்ளிகளை திறக்கலாம். அதற்கு முன்னர் பள்ளிகளில் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில் துவக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web