பீப் பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு.. மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்!

 
 பாஜக நிர்வாகி சுப்பிரமணி

கோவை மாவட்டம் உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அபிதா தம்பதியினர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனைக்கு வைத்து கடை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர், பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்கும் கடைகளை இங்கு நடத்த வேண்டாம் என்று மிரட்டியுள்ளார்.

ரவி மற்றும் அபிதா தம்பதியினர் இதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் கடையை சிறிது தூரம் மாற்றியுள்ளனர். அந்தப் பகுதியில் கடை அமைக்க அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சாலையோர பீப் பிரியாணி கடைக்குச் சென்று மிரட்டிய பாஜக தலைவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஓடியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது துடியலூர் காவல் நிலையத்தில் 126(2), 192, 196 மற்றும் 351/2 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web