திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தெளிவாக தெரிகிறது ... ஓ. பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக திமுக கட்சி அமைச்சர்கள் மற்றும் தலைமைத்துவம் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம், முதல்வர் ஸ்டாலின் கூறிய “திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மீண்டும் திமுக ஆட்சி வருவதற்கான வாய்ப்பு கண்கூடாக தெரிகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர், “தற்போதைய சூழ்நிலையில் பல கட்சிகள் பிரிந்து செயல்படுகின்றன. அண்ணா திமுக, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற முக்கிய கட்சிகளுக்குள் உட்பிரிவுகள் உருவாகியுள்ளன. இதனால் திமுகவுக்கு மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை நான் அல்ல, பொதுமக்களே கூறி வருகிறார்கள்” என ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
