அக்டோபர் 27-ம் தேதி சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் மழை பெய்யும் அபாயம் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 27-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கும் வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னதாக இன்று சில மாவட்டங்களுக்கு, நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அக். 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் மழை எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
