3 மணி நேரத்துக்கு மேல் லேட்டாச்சுன்னா விமானத்த ரத்து செய்ங்க... மத்திய அமைச்சர் திடீர் உத்தரவு!
தலைநகர் டெல்லியில் காற்றுமாசுபாடு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் பருவமழை இல்லாததால் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் சரிந்து வரும் வெப்பநிலையும் அடா் புகை மூட்டமும் நாளுக்கு நாள் நிலைமையை மோசமாக்கி வருகின்றன. இதன் காரணமாக சாலைகளிலேயே இரவு முதல் பிற்பகல் வரை பல இடங்களில் காண்புதிறன் குறைந்துள்ளது.
Chaired a high-level meeting today to ensure Delhi Airport is ready for the winter season. With a passenger-centric approach, Our preparations for winter challenges are on track. pic.twitter.com/89xPO8ZxSA
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) November 20, 2024
இதனையடுத்து டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது கடும் சவாலாக மாறியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நேற்று நவம்பர் 20ம் தேதி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமானப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
High-Level Review Meeting on Fog Preparedness Chaired by Hon'ble Minister Sh. Ram Mohan Naidu Ji@RamMNK pic.twitter.com/39BXOk2uTw
— MoCA_GoI (@MoCA_GoI) November 20, 2024
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி விமான நிறுவனங்கள் விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பயண இடையூறுகளைக் குறைக்க செக்-இன் கவுண்டர்களில் அதிகளவிலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், 3 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், விமானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!