பெரும் சோகம்... ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி... !
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தில் வசித்து வருபவர் 65 வயது வரிசை கனி . இவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது மகள் 40 வயது அனீஸ் பாத்திமா மற்றும் அவரது மருமகன் 47 வயது சகுபர் சாதிக் , 45 வயது ஹர்ஷத் , 40 வயது கதீஜா ராணி , ஆயிஷா பேகம் ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆம்புலன்ஸ் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது பெட்ரோல் பங்க்கில் விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த நோயாளி வரிசை கனி, சகுபர் சாதிக், அனீஸ் பாத்திமா மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை 2 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த சகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கி கொண்டார். மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பேருந்து மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மூவர் உடலை கேணிக்கரை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!