எங்கள் குழந்தைகள் என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள் , டெல்லி அல்ல... செல்வப்பெருந்தகை ஆவேசம்!

 
செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  சென்னை சத்தியமூர்த்தி பவனில் "கிசான் நியாய யோதா -விவசாயிகளுக்கான நீதி போராளிகள்" நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பிற மாநில நலனை பேசும் தமிழக பாஜக தமிழ்நாட்டின் நலனை பேச மறுக்கிறது. பிற மாநில நலனை பேசுவதற்காகவே தமிழ்நாடு பாஜகவை ஒரு யூனிட்டாக வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்கான பாஜகவாக இருந்தால் தமிழ்நாட்டின் நலனை பற்றி பேச வேண்டும். 

மோடி செல்வப்பெருந்தகை

குறைந்தபட்சம் தங்களது கருத்தை பாஜக பதிவு செய்ய முன் வர வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவின் ஓர் அங்கமாக மாறிவிட்டதால் பாஜக சொல்வதை கேட்கிறது. ஆளுநர் படித்துவிட்டு வந்து பேசுகிறாரா படிக்காமல் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் பேசியதெல்லாம் பாருங்கள்... உலகம் ரிஷிகளால் உருவானது என சொல்கிறார். மூடநம்பிக்கை நிறைந்தவர்கள் இப்படிதான் பேசுவார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களும், தமிழ்நாடு அரசும் முடிவு செய்யும் எந்த மொழியையும் திணிக்க கூடாது. 

செல்வப்பெருந்தகை

இருமொழி படித்தவர்கள் தான் இன்று மிகப்பெரிய ஜாம்பவான்களாக உள்ளனர். எங்கள் குழந்தைகள் என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை எங்கள் குழந்தைகள் தீர்மானிப்பார்கள். டெல்லியிலிருந்து தீர்மானிக்க கூடாது. அண்ணாமலையை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ், பாஜகவை சார்ந்தவர்களை தவிர அனைவரும் சமூக விரோதிகள்தான். தமிழ்நாடு மீனவர்களை கடத்தல்காரர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மீனவர்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது மீனவர்கள் அண்ணாமலைக்கு பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சருக்கு மும்மொழியில் தமிழிசை வாழ்த்து தெரிவித்தது அநாகரிகத்தின் உச்சம்” என கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web