சம்பல் மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே நுழையத் தடை... கலெக்டர் திடீர் உத்தரவு!

 
கலவரம்
 


 
உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உட்பட வெளி ஆள்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை  2ம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையில்  துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், இச்சம்பவம்  குறித்து  விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உத்திரப்பிரதேசம்


இந்நிலையில் சம்பல் மாவட்டம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சமூக செயல்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட மாவட்டத்துக்குள் முன் அனுமதியினறி வெளி ஆட்கள் நுழைய கலெக்டர் ராஜேந்திர பைஸியா தடை விதித்து  உத்தரவிட்டுள்ளார்.
சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529ல் முகலாய பேரரசா் பாபா் கோயிலை  இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து  ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உட்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள்  வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் நவம்பர் 19ம்தேதி செவ்வாய்க்கிழமை  ஆய்வு நடத்தினர்.

சம்பல்
இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு  நீதிமன்ற ஆணையா் 2ம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதனையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசி  வாகனங்களை தீவைத்து எரித்தனா்.
இதனைக் கட்டுப்படுத்த காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் நயீம், பிலால், நௌமான் உட்பட  3 போ் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் படுகாயமடைந்தனா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web