சிக்கிய 100 ஆபாச வீடியோக்கள்.. உதவி செய்வது போல் நடித்து பெண்களை நாசமாக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்.. !

 
அம்ஜத்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி நகரப் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வரும் முகமது அம்ஜத் (50), தனது மனைவியுடன் வசித்து வந்தார். தனது மருந்துக் கடைக்கு வரும் பெண்களை பணம் கொடுத்து உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றி வந்தார். பின்னர் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த வீடியோவை பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய அழைத்தார்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

ஒரு பள்ளி மாணவி உட்பட 30க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது தொடர்ச்சியான வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சென்னகிரி காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்பி உமா பிரசாந்திடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தினர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அம்ஜத் ஒரு பள்ளி மாணவி உட்பட 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

கைது

அவரது செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட முகமது அம்ஜத் மீது பல போக்சோ சட்டப் பிரிவுகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை தனது வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில், தற்போது இந்த வீடியோக்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மாவட்ட எஸ்பி உமா பிரசாந்த் கூறுகையில், "சமூக ஊடகங்களில் பரவும் ஆபாச வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது. மீறி பகிரப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web