ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... குற்றாலத்தில் மீண்டும் குளிக்கத் தடை!
தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். இதனால் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் சுற்றலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மீண்டும் சாரல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!