படு மோசமடைந்த பாகிஸ்தான் காற்றின் தரம்.. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்றின் தரக் குறியீடு 1,600 என்று எட்டியது. காற்றின் தரம் மோசமடைந்துள்ள சூழலில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 17ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகை மூட்டம் மற்றும் பார்வைத் திறன் குறைந்ததால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு, தனியார் பள்ளிகள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், முர்ரி மாவட்டத்திற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாப் அரசு நேற்று லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் புகை மூட்டத்தால் நிலைமை மோசமடைந்ததால் வாரத்தில் 3 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, இந்த பூரண ஊரடங்குச் சட்டம் இன்றும் நாளையும் தொடரும். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 23 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!