வீடு தேடி வரும் பழனி பஞ்சாமிர்தம்!

 
வீடு தேடி வரும் பழனி பஞ்சாமிர்தம்!


முருகனின் அறுபடை வீடுகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது பழனி. இந்தக் கோவிலில் அனைத்து முருக விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் நடத்தப்படும் தேரோட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது. திருப்பதியை போலவே எந்த நேரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வீடு தேடி வரும் பழனி பஞ்சாமிர்தம்!


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பக்தர்கள் அடிக்கடி கோவிலுக்கு வர இயலாத நிலையில் மூன்று மாதங்களாக பிரசாதத்தை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை பிரசாதத்தை தாபலில் அனுப்பும் திட்டதை தொடங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் தற்போது மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் பழனி பஞ்சாமிர்தம்!


இந்த திட்டத்தின் படி, அருகில் உள்ள தபால் நிலையங்களில் பிரசாதத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து ரூபாய் 250 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பார்சலில் அரைகிலோ பஞ்சாமிர்தம், ராஜ அலங்காரத்துடன் கூடிய ஒரு முருகர் படம், 10 கிராம் விபூதி அடங்கிய பிரசாத பொட்டலம் தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web