பகீர் ஆய்வறிக்கை.. ஆணுறைகளில் ரசாயனம்.. புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்!

உலகளவில் பல்வேறு வகையான ஆணுறைகளில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல பிராண்டுகளின் ஆணுறைகளில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறியுள்ளனர். மமாபோஷன் (Mamapassion) என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. பின்னர் இது போன்ற ஆணுறைகளில் ஃப்ளோரைன் உள்ளதா என சோதனை செய்தனர்.
அந்த ஆய்வில் குறிப்பிட்ட ஆணுறைகளில் இரண்டு மடங்கு ஃப்ளோரைன் இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 29 ஆணுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 6 பொருள்களில் 20% ஃப்ளோரைன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய ஆணுறையைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித பிறப்புறுப்புகள் மெல்லிய தோல் கொண்டவை. மேலும் இதில் ரத்தக்கறை இருப்பதால், நச்சு இரசாயனங்களை விரைவில் உறிஞ்சிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா