பாரா ஒலிம்பிக் போட்டி: 4 பதக்கங்களை தட்டிச் சென்ற இந்தியா.. வெள்ளிப்பதக்கம் வென்றார் மணீஷ் நர்வால்!

 
மணீஷ் நர்வால்

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் வெள்ளிக்கிழமை 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா வென்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மணீஷ் நர்வால் பங்கேற்றார்.

தொடக்கம் முதலே தொடர்ந்து ரன் குவித்து வரும் மணீஷுக்கு, தென் கொரிய வீரர் ஜோ ஜியோங் டோ சவால் விட்டார். எனினும் இறுதியில் தென்கொரிய வீரர் ஆதிக்கம் செலுத்தி 237.4 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இந்தியாவின் மணீஷ் நர்வால் 234.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 22 வயதான மணீஷ் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 அவானி லெகாரா

இந்தியாவின் பதக்க விவரம்: பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். தற்போது மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 9வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web