பைக் வாங்கி தர தாமதமாக்கிய பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நடேசன் மற்றும் அபரஞ்சம். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல் மற்றும் கோகுல் என மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே தங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாதேஸ்வரன் தனது பெற்றோரிடம் விலையுயர்ந்த பைக் வாங்கித் தருமாறு நீண்ட காலமாகக் கேட்டு வந்தார். இதற்கு அவரது தந்தை நடேசன், “சோள அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன், அதுவரை பொறுமையாக இரு..” என்றார். ஆனால், மறுத்த மாதேஸ்வரன், தனக்கு பைக் வாங்கித் தர வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பைக் வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் விரக்தியடைந்த மாதேஸ்வரன், பெற்றோர் காட்டு வேலைக்குச் சென்ற பிறகு, தனது தாயின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் மாதேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மாதேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்றபோது, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை எடுக்கக் கூடாது என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன், அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டு, உடலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!