10வது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் மார்க் குறைப்பு... இந்த கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வந்தது!
கர்நாடகா மாநிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 (பியூசி II) மாணவர்களின் தேர்வில் பாஸ் மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கல்வி ஆண்டான 2025-2026 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி 10ம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண்ணுக்கு பதில் 33 சதவீதம் பெற்றால் மட்டும் தேர்ச்சி பெறுவார்கள். அதேவேளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு 35 சதவீதத்திற்கு பதில் 30 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். இதன் பொருள், 10ம் வகுப்பில் ஒரு பாடத்தில் Internal மற்றும் External மதிப்பெண்கள் சேர்த்து சராசரியாக 33 மதிப்பெண், மொத்தமாக 625 மதிப்பெண்களில் 206 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி கிடைக்கும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; மொத்தமாக 600 மதிப்பெண்களில் 198 மதிப்பெண் எடுத்தால் போதும்.
இந்த மாற்றத்தை பள்ளித் தேர்ச்சி மற்றும் மதிப்பீட்டு வாரியம் பரிந்துரையிட்டது. சமீபத்திய ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, பாஸ் மார்க் குறைப்பை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அமலுக்கு வரும் புதிய நடைமுறை ரெகுலர், ரிப்பீட், தனியாக தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். கல்வித்துறைக்கு கடந்த 15 நாட்களில் 701 கடிதங்கள் ஆதரவாகவும், 8 கடிதங்கள் எதிராகவும் வந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மாணவர்களின் பெரும்பாலானோர் இந்த புதிய பாஸ் மார்க் குறைப்பை வரவேற்றுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
