நடுவானில் பயணிக்கு திடீர் மாரடைப்பு... உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவர்கள்!
கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட விமானத்தில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெருக்கியுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த திருச்சூர் பகுதியைச் சேர்ந்த சமீர் (34) என்பவர், சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது திடீரென மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மயங்கி விழுந்தார். இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பதற்றமடைந்தனர்.

அப்போது அதே விமானத்தில் இருந்த கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த அபிஜித் (26) மற்றும் செங்கன்னூரைச் சேர்ந்த அஜீஷ் (29) என்ற இரண்டு மருத்துவ பணியாளர்கள் விரைவாக முன்வந்து உதவி செய்தனர். அவர்கள் சமீரை இருக்கையிலிருந்து கீழே படுக்க வைத்து, சி.பி.ஆர் (CPR) எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்தனர்.
விமான ஊழியர்கள் மருத்துவ பெட்டியிலிருந்து தேவையான கருவிகளை வழங்கிய நிலையில், இருவரும் நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதித்து சிகிச்சை தொடர்ந்தனர். சில நிமிடங்களில் சமீரின் சுவாசம் சீராகி உயிர் நிலை திரும்பியது.

அபுதாபியில் விமானம் தரையிறங்கியதும், முன்கூட்டியே அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த வீரச் செயலை பார்த்த பயணிகள் இருவருக்கும் கைகொட்டி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், அவர்கள் பணியில் சேர இருந்த மருத்துவ நிறுவனம் உடனடியாக பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. மனிதநேயத்துடன் செயல்பட்ட இந்த இரு கேரள மருத்துவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பெய்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
