சிக்கலில் பதஞ்சலிக்கு ... மிளகாய் பொடியை சந்தையிலிருந்து திரும்ப பெற உத்தரவு..!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பதஞ்சலி நிறுவனத்திற்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் பொடியை சந்தையில் இகுந்து திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2011-க்கு இணங்காததால் பேட்ச் நம்பர் AJD2400012-ஐ கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட சிவப்பு மிளகாய் பொடியின் முழு தொகுப்பையும் திரும்பப் பெற வேண்டும்” என பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
FSSAI நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை கண்காணித்து வரும் அரசு நிறுவனம் ஆகும். பொதுவாக உணவுப் பொருட்களில் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரம்பு உள்ளது. அதைத் தாண்டி பயன்படுத்தினாலோ அல்லது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினாலோ அதை சரி செய்யும் வகையில் இந்நிறுவனம் செயல்படும்.
அதன்படி 2024 ஜூலை மாதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில மசாலா பொருட்களில் எத்திலின் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி கலப்படம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சில மசாலா பொருட்களின் உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!