பவன் கல்யாண் நடிகர் விஜய்க்கு வாழ்த்து ட்வீட்...!
நேற்று தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாட்டை நடிகர் விஜய் வெளியிட்டார். விஜய், பாஜக மற்றும் திமுக தான் தங்களின் இரு அரசியல் எதிரிகள் என தெளிவுபடுத்தினார்.
My Heartfelt Congratulations!! to Thiru @actorvijay avl, for embarking on a political journey in Tamilnadu, the land of Saints & Siddhars.
— Pawan Kalyan (@PawanKalyan) October 28, 2024
@tvkvijayhq
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு, பாஜகவின் கூட்டணி கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட ட்வீட்டில் "துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில், புதிய ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்காக நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் திமுக மற்றும் உதயநிதிக்கு எதிராக மறைமுக எதிர் அரசியலை கையில் எடுத்துள்ளார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் விஜய்க்கு வருங்காலங்களில் அரசியல் ரீதியான சில உதவிகளை செய்து, திமுகவை தோற்கடிக்க வியூகங்களை வகுப்பார் என அரசியல் விமர்சசர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!