மக்களே உஷார்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

 
மக்களே உஷார்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 11 மாவட்டங்களில் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,808 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,48,497 ஆக அதிகரித்துள்ளது.


ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,911 பேர்.
இந்த சூழலில் 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில்

மக்களே உஷார்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!


கோயம்புத்தூர்-169 பேர்
ஈரோடு- 130
சென்னை-126
சேலம்-105
செங்கல்பட்டு -99
தஞ்சாவூர்- 98
கடலூர்-11
திண்டுக்கல்-11
கள்ளக்குறிச்சி -11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால் மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுவெளியில் நடமாடும் போது முகக்கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக அவசியம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நிச்சயம் கொரோனா 3வது அலை வரும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web