மக்களே உஷார்.. தமிழகத்தில் தீயாய் பரவும் உண்ணி காய்ச்சல்.. இருவர் பலியான சோகம்!

 
உண்ணி காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டம், புதுகாலக்கவுண்டன்பட்டி குஜிலியம்பாறையைச் சேர்ந்த முதியவர் பழனிசாமி (61) உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவரும் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இருவரையும் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசைவலி, வாந்தி, தொண்டை வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். சாதாரண காய்ச்சல் என மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web