மக்களே உஷார்.. மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 
 ஜிகா வைரஸ்

இந்தியாவில் ஜிகா வைரஸ் அவ்வப்போது பரவி வருகிறது. அதன்படி, தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நோய்வாய்ப்பட்டான். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனுக்கு ஜிகா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகித்தனர்.

இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறுவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் சந்தேகம் எழுந்ததையடுத்து, மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையினர், வெங்கடாபுரம் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வைரஸ் காய்ச்சல் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை

நெல்லூர் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து ஆந்திர அமைச்சர் ஆனம் ராமநாராயணன் ரெட்டி கூறியதாவது, மரிபாடு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஏற்கனவே சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். வைரஸ் அறிகுறி உள்ள சிறுவனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு மருத்துவக் குழுவினர் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும், யாரும் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web