தூத்துக்குடியில் கதறும் மக்கள்... பாதாள சாக்கடை பணியால் அலங்கோலமான சாலைகள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிவிட்டு, சாலையை சமன் படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டு தபால் தந்தி காலனி 7வது தெருவில் (மேற்கு) நேற்று பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதில் தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழிகளை மூடி மணலை சமநிலை படுத்த பொதுமக்கள் கேட்டதற்கு இப்படித்தான் வேலை செய்வோம் என்று திமிராக பதில் சொல்லியே கிளம்பி விட்டார்கள். பல இடங்களில் இப்படி தான் பணிகள் நடைபெறுகின்றன. தொகுதியின் எம்.பி., எம்.எல்.ஏ. வார்டு கவுன்சிலர் என அனைவருமே ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள். இருந்தும் நிலைமை இத்தனை மோசமாக இருக்கிறது.
இந்த பகுதிகளில் ஆட்டோ, கார் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்ததால் சாலை சேறும் சகதியமாக மாறியது. இந்நிலையில் அவ்வழியே சென்ற ஆட்டோ ஒன்று சேற்றில் மாற்றிக் கொண்டது. மக்கள் நடந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!