நாளை தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெறும். இந்த முகாம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னையில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை, வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி அரசு அலுவலகங்களும் செயலம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நாளை மின்சார அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் . வழக்கமான வார வேலை நாட்களை போல் மின் கட்டணம் செலுத்தலாம். தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறையாகும். நவ.1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!