பட்டாசு வெடித்து, இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டம்...அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அதிரடி சரவெடி!

மதுரை மாவட்டத்தில் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பின. இந்நிலையில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் முழுமையாக ரத்து!
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) January 23, 2025
மதுரை மக்களின் ஒற்றுமைக்கும் உறுதிமிகு போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!#Tungsten pic.twitter.com/RqwYWQZHGZ
டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டங்ஸ்டன் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.நேற்று ஜனவரி 22ம் தேதி புதன்கிழமை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் நாளை மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது என அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, இன்று டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் ஏலம் கைவிடப்படுகிறது.” என தெரிவித்துள்ளார். முன்னதாக, டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்து அறிவிப்பை அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தப் பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!