நள்ளிரவைக் கடந்தும் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்... வெறிச்சோடியது சென்னை!

 
பேருந்து

இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை மகளை வரவேற்ற்பு பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணப்பட துவங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்றும் நள்ளிரவு வரையில் கூட ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் விடுமுறைக்காக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு நிரம்பி, மக்கள் கூட்டம் முன்பதிவில்லா பெட்டிகளிலும் நிரம்பி வழிந்தது. 

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் வாசலில் நின்று கொண்டு செல்லும் அளவுக்கு ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதே வேளையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தினமும் 2,000 பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதலாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திடீர் மாரடைப்பு!! பயணிகளை காப்பாற்றி,  உயிரை விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!!

வெள்ளி, சனிக்கிழமைகளில் 3 லட்சம் மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் நோக்கி சென்றுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. .

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web