அன்புமணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு... நெல்லையில் நடைபயணம் ரத்து!
நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நாளை நடைபயணம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்கிடையில், கரூரில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தொடங்கி உள்ளது.

இந்நிலையில், நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலை ஏற்று அன்புமணி தனது நடைபயணத்தை ரத்து செய்தார். மேலும் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
