தீபாவளி கொண்டாட்டம் ... தமிழகம் முழுவதும் 6630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு மற்றும் ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பட்டாசுக் கடைகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் தீயணைப்புத் துறை கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதற்காக, தீயணைப்புத் துறை இயக்குநரும் டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அந்த சுற்றறிக்கையின் படி, வெடிப்பொருள் சட்ட விதிகளின்படி கடை அமைக்கும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை நேரடியாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்க விரும்புவோர் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையிடமிருந்து அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

இந்த ஆண்டுக்கான தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 9,549 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 6,630 விண்ணப்பங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் 681 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் சில விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் அனுமதி பெறும் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
