பரபரப்பு... பிரபல கடை பிரியாணியில் பூச்சி?
கோவை மாவட்டத்தில் காந்திபுரம் கிராஸ் கட் சாலையில், எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில், டிசம்பர் 30ம் தேதி பிற்பகல் இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். சிக்கன் பிரியானி ஆர்டர் செய்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த பெண் இருவரும் உணவை சாப்பிட்டனர். உணவு சாப்பிடும்போது அதில் பூச்சி இருந்ததாக சர்வரிடம் முறையிட்டு சண்டையிட்டார். அதனை அவர் அலைபேசியில் பதிவு செய்திருக்கின்றார். பின்னர் அவர் தனது instagram பக்கத்தில் அதனை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்நிலையில் உணவக பணியாளர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கின்றனர் . அதில், அந்த வாடிக்கையாளர் உணவு சாப்பிட்டுவிட்டு, அருகாமையில் அமர்ந்திருந்த பெண்ணுடன் பேசுகிறார். பின்னர், சிறிது நேரம் மேஜைக்கு அடியில் பிரியாணி தட்டை வைத்து விட்டு, அந்த தட்டை மேஜை மீது வைக்கின்றார். இருவர் கைகளை மேஜை அடியில் வைத்த ஏதோ பேசிவிட்டு, தட்டை டைனிங் டேபிளில் வைப்பது, பிறகு செல்ஃபோனில் படம் பிடிப்பது என அடுத்தடுத்த காட்சிகள் நடைபெற்றன.
இதுபோன்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து பேசிய ஹோட்டல் பணியாளர்கள், குறிப்பிட்ட இளைஞர் அவராகவே பூச்சியை எடுத்து பிரியாணி தட்டில் போட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்பியிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் தந்திருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து மதுபோதையில் ஒரு இளைஞர் பிரச்சனை செய்ததாகவும், பின்னர் அது பிரியாணி இலை எனவும் தெரிய வந்தது, அதன் பிறகு அந்த இளைஞர் போலீசில் மன்னிப்பு கடிதம் எழுதி தந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!