அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைக்கோரி வழக்கு!

 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைக்கோரி வழக்கு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் உறுப்பினரான ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைக்கோரி வழக்கு!

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களை அடித்து, விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அதிமுகவின் உறுப்பினரான ஜெயசந்திரன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தலை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைக்கோரி வழக்கு!

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், எனவே, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும், ஜெயசந்திரனின் வழக்கறிஞர் பிரசாத், நீதிபதியிடம் முறையீடு செய்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி, ‘மனுவே தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரிப்பது?. இது தொடர்பில் மனுத்தாக்கல் செய்த பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.

From around the web