நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து.. பலி எண்ணிக்கை 181 ஆக உயர்வு!
பெரும் சோகமாக விபத்திற்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் பிடிப்பதற்காக கூட்டம் கூடிய நிலையில், நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
Fuel tanker explosion kills at least 90 in northwestern Nigeria pic.twitter.com/oL5iHRNEze
— Türkiye Today (@turkiyetodaycom) October 16, 2024
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த 15ம் தேதி இரவு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது.

இதனால், அந்த பெட்ரோலை சேகரிக்க அப்பகுதியிலுள்ள மக்கள் சாலையில் குவிந்தனர். மக்கள் பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலர் உயிரிழந்து விட்டநிலையில், தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
