அடுத்த அதிர்ச்சி... வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லாரி ... 98 பேர் உயிரிழப்பு!

அடுத்தடுத்து துயரமாக நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் மாதம் நைஜீரியாவில் ஒரு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 4 மாதத்திற்குள் அதே போன்ற மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
நைஜீரியாவில் ரயில் பாதைகள் இல்லாததால், சாலைகள் பெரும்பாலும் பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுகின்றன. சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் விபத்துகள் ஒரு நிலையான கதை. கடந்த அக்டோபரில், ஜிகாவா மாநிலத்தின் மஜியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்றபோது டேங்கர் லாரி வெடித்ததில் 147 பேர் இறந்தனர். இப்போது, மீண்டும் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில், குராரா பகுதியில் பயணித்த டேங்கர் லாரியில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் முழுவதும் கசிந்து சாலையில் ஓடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து, கொள்கலன்களில் பெட்ரோலை எடுத்துச் செல்ல முயன்றனர்.
அந்த நேரத்தில், டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறி 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி போலா டினுபு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல் விலை 400 சதவீதம் அதிகரித்துள்ளதால், மக்கள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் உயிரை இழந்து வருவதாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!