போயிங் 747 சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து... 2 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம் தரையிறங்கும் போது பெரும் விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்ததால் விமானம் முழுமையாக நொறுங்கியது. இந்த விபத்தில் இரு பேர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளதுடன், எமிரேட்ஸ் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை. விபத்தில் சிக்கிய விமானத்தில் சரக்குகள் எதுவும் இல்லை என்றும், 32 ஆண்டுகளாக சேவையில் இருந்த இந்த போயிங் 747 முதலில் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு பின்னர் சரக்கு விமானமாக மாற்றப்பட்டதாகவும் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
