மொபைலில் கேம் விளையாடத... கண்டித்ததால் சிறுவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை... கதறும் பெற்றோர்!

இன்றைய அவசர யுகத்தில் 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் கையில் ஆறாம் விரலாய் செல்போன்கள் முளைத்து விட்டன. அருகில் இருப்பவர்கள் தூரமாகிவிட்டனர். எங்கோ தொலைதூரத்தில் முகமறியா நட்புக்காக குடும்ப உறவுகளின் மேன்மை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அதிலும் பதின்வயது பிள்ளைகளின் பெற்றோர் அதோ கதி என்ற அளவுக்கு நடந்து வருகிறது. படிக்காத பிள்ளைகளை படி என சொல்லவும் முடியவில்லை. கையில் மொபைலை கீழே வை எனவும் சொல்லமுடியவில்லை. உடனே விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் மதுரையில் ஆன்லைன் கேமால் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயது சிறுவன் செல்போனை உடைத்து விட்டு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் விளையாடி வந்தான். பெற்றோர் கண்டித்துள்ளனர்.
மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் 17 வயது ஹரிஹரசுதன். 11-ம் வகுப்பு வரை படித்து வந்த இவர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தினமும் தனது செல்போனில் பப்ஜி, ஃபிரீ பையர் போன்ற ஆன்லைன் கேம்களை ஆடுவதில் முழுமையாக மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் தொடர்ந்து இது குறித்து கண்டிக்கவும், அவரை கேட்டுக்கொள்ளவும் செய்துள்ளனர். எனினும், சிறுவன் தனது பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யவே இல்லை. மொபைல் கேம்களில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஹரிஹரசுதன், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தனது செல்போனை தரையில் போட்டு உடைத்துவிட்டு, வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளார். அவர் தரையில் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சிறுவன் உயிரற்று கிடந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த தற்கொலைக்கு ஆன்லைன் கேம்களே முக்கிய காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!