பூங்காவில் விளையாடிய போது அதிர்ச்சி.. சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து!

 
 வ.உ.சி பூங்கா

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் வ.உ.சி பூங்கா கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் இருப்பதால், அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு விளையாட வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வ.உ.சி பூங்காவிற்கு விளையாட வந்தார். அப்போது, ​​அங்கு சறுக்கு பலகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராத விதமாக சிறுமியின் கால் விரல் துண்டிக்கப்பட்டு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பூங்காவில் சரியான பராமரிப்பு இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஆண்டியப்பன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web