நாளை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

 
மோடி

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணியினரை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 5-ம் தேதி நேரில் சந்தித்து பாராட்ட உள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நவிமும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்துடன் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து, உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

உலக கோப்பைக் கிரிக்கெட்

அணியின் வெற்றியை ஒட்டி நாடு முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பல அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

மகளிர் கிரிக்கெட்

இந்நிலையில், உலகக்கோப்பை வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டும் பொருட்டு பிரதமர் மோடி நாளை நவம்பர் 5ம் தேதி அவர்களை சந்தித்து வாழ்த்தப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?