பிப்.11ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார்!

 
மோடி

பிப்ரவரி 11ம் தேதி தமிழகம் வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ரூ.15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரயில் பாலம் அருகில், ரூ.545 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோதி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் இரு பாலத்தையும் பார்வையிடுகிறார்.

பாம்பன் பாலம்

இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ரயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, பின்னர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் செல்கிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார். பின்னர் புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணம் செய்யும் வகையிலும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது.

பாம்பன் ரயில் பாலம்

மேலும், ரூ.15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் வருகையையொட்டி அவரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேசுவரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web